அவுஸ்திரேலியாவை தெறிக்க விடும் அறிமுக இலங்கை வீரர் சந்தகன்!
அறிமுகப் போட்டியிலே அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்துள்ளார் இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான லக்ஷான் சந்தகன்.
பல்லேகலவில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் அவர் அனுபவ வீரர் ஹேரத்துடன் கைகோர்த்து அவுஸ்திரேலியாவை மிரள வைத்தார்.
முதல் இன்னிங்சில் அவர் 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 81 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகப் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
1935ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் இடது கை பந்தவீச்சாளர் லெஸ்லி ஸ்மித் தனது அறிமுகப் போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றியமையே இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் தனது முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட அதிக விக்கெட்டுகளாகும்.
இந்நிலையில் 2வது இன்னிங்சிலும் லக்ஷான் சந்தகன் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.
அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ்க்கு அவர் வீசிய ஒரு சுழற்பந்து அனைவரையும் வியக்க வைத்தது. அந்த பந்தை எதிர்கொள்ள திணறிய பர்ன்ஸ் (29 ஓட்டங்கள்) போல்ட் ஆனார்.
அவுஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 27 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 185 ஓட்டங்கள் தேவை.