மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர்.
மெல்டன் வெஸ்ட்டை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகனச்சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் அவர் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Bourke Street and Swanston Streetபகுதியில் கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதியதில் நேற்றிரவு பெரும் குழப்பநிலையேற்பட்டது.
இதன் பின்னர் அந்த வாகனம் மற்றுமொரு வாகனத்தை மோதியதில் அந்த வாகனத்தை செலுத்திய 76வயது நபர் கொல்லப்பட்டார்.
டோயோட்டா சாரதி கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் தனது வாகனத்தில் இருந்து ஆவேசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டார் அவர் கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபடாதவர் கண்காணிப்பின் கீழ் இல்லாதவர் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் பயங்கரவாதத்திற்கு தொடர்பில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.