அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசலையை விட்டு வெளியேறி காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா முழுவதும் காலநிலை பேரணிகளுக்கு பாடசாலை வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 50,000 மாணவர்கள் வரை போராட்டத்தில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது காலநிலை நெருக்கடி குறித்து நடவடிக்கை எடுக்க இளைஞர்களின் சமீபத்திய அடிமட்ட பிரச்சாரம்.
உலகில் பாதகமான பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி அவுஸ்திரேலியா போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட 17 வயதான டேவிட் சொரியானோ பிபிசியிடம் தெரிவித்துள்ளதாவது,
தான் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதாகவும், இளைஞர் இயக்கத்தை கணக்கிடப்பட வேண்டிய ஒன்றாக அரசாங்கம் பார்க்க விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பயப்படுகிறோம், கவலைப்படுகிறோம். எங்களுக்குப் பின் வரும் தலைமுறைகளுக்கும், நமது சொந்த தலைமுறையினருக்கும் கூட எதிர்காலம் இருக்காது என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது,” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவி சொரியானோ, அவர் வசிக்கும் மேற்கு சிட்னியில், வெப்ப அலைகள் மற்றும் குறைந்த காற்றின் தரம் ஆகியவற்றை அனுபவித்ததாகக் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய அதானி சுரங்கம் உட்பட புதிய நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் வேண்டாம் என போராட்டாக்காரர்கள் கோருகின்றனர்.
இந்தியாவின் அதானி நிறுவனம் அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய வெப்ப நிலக்கரி சுரங்கத்தை உருவாக்கியதற்காக விமர்சனங்கள் எழும்பியுள்ளது.