அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் வசித்த நியுசிலாந்துபிரஜைகளிற்கு அவுஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்படலாம் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
சில நியுசிலாந்து பிரஜைகளிற்கு வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குவதற்காக தேர்தல் சட்டங்களில் என்ன மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து நாடாளுமன்றத்தின் தேர்தல் குழுவினருடன் ஆராயவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாற்றங்களிற்கான வாய்ப்புள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் வசிக்கும்,அவுஸ்திரேலிய சமூகத்திற்கு பங்களிப்பு செய்துள்ள,வரிகளை செலுத்தியுள்ள நியுசிலாந்து பிரஜைகளிற்கு வாக்களிப்பு உரிமைகளை வழங்கும் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து தேர்தல்கள் குறி;த்த கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் கேள்வி எழுப்பவுள்ளதாக அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்தில் ஒரு வருடத்திற்கு மேல் வசிக்கும் அவுஸ்திரேலியர்களிற்கு அந்த நாடு வாக்களி;க்கும் உரிமையை வழங்கியுள்ளது.
எனினும் நியுசிலாந்தின்சாதகமான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியா செயற்படவில்லை.
1984ம் ஆண்டிற்கு முன்னர் பிரிட்டிஸ் பிரஜைகள் என பதிவு செய்த சிலருக்கு மாத்திரம் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
2021 சனத்தொகை கணக்கெடுப்பின் போது நியுசிலாந்தில் பிறந்த 530,000 பேர் அவுஸ்திரேலியாவில் வாழ்வது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியவில் வாழும் நியுசிலாந்து பிரஜைகளின் பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளதாக ஜெசின்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
வழமையான நடைமுறைகளிற்கு மாறாக நியுசிலாந்து பிரஜைகளிற்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.