அவர் கையால் விருதை கொடுங்கள், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு, முன்னணி நடிகர் கோபம்?
நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடித்த நானும் ரவுடி தான் படத்திற்காக பல விருதுகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று SIIMA விருது விழாவிலும் சிறந்த நடிகை என்ற விருதை பெற்றார். அப்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கையால் இந்த விருதை பெற மறுத்த இவர், விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என கூறினார்.
இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்து விட்டனர். இதை தொடர்ந்து கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது.