ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 18ஆம் திகதி உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணர்கள் இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர்.
சிறிஜயவர்தனபுர வைத்தியசாலையில் அன்றைய தினத்தில் தமது அவயவங்களை தானம் செய்ய முடியும் எனவும் அதற்கான அனைத்து வசதிகளும் வைத்தியசாலையில் செய்து கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.