ஜோக்கர் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், அடுத்ததாக, ஆண்தேவதை படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். ‘தொடர்ந்து, அம்மா கேரக்டர்களிலேயே நடிப்பது ஏன்’ என, கேட்டால், புன்னகைக்கிறார்.
‘முதல் படத்தில் அம்மாவாக நடித்தேன். அடுத்த படமும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமா என, யோசித்தேன். எவ்வளவு நல்ல கதை அமைந்தாலும், படக்குழு சிறப்பாக அமைவது கடினம். இந்த படத்தில் அது அமைந்ததால், நடிக்க சம்மதித்தேன். இதில், வேறு எந்த ரகசியமும் இல்லை’ என்கிறார், ரம்யா.
‘எனக்கு நடிப்பதை விட, சிறந்த தொழிலதிபர் ஆவதே லட்சியம். எந்த தொழில் என்பதை எல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை’ என, சஸ்பென்ஸ் வைக்கிறார், ரம்யா.