தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணியின் ஒரு பகுதியை இராணுவத்திற்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது உறவுகளை நினைத்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் விட்டு அழுது தமது சோகங்களை போக்குவதாகவும், அதற்கு அனுமதிக்காது எமது துயிலுமில்ல காணியில் பப்பாசி செய்கை செய்வதோடு தேநீர் சாலை ஒன்றையும் நடாத்தி வருகின்றனர்.
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி!
தற்போது இந்த இடத்தின் ஒரு பகுதியை நிரந்தரமாக அபகரித்து நிரந்தரமாக இராணுவ முகாம் அமைக்க முயல்வது வேதனை அளிப்பதாகவும் ,இந்த காணியை இராணுவத்துக்கு வழங்காது தமது உறவுகளை நினைந்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் விட்டு அழுது தமது சோகங்களை போக்குவற்கு சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரனிடம் வினவியபோது….
அலம்பில் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை சூவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தும் பிரதேச மக்களிடம் நான் தொடர்பு கொண்டு கேட்டபோது சில இடங்களில் சுவீகரிப்பின் நடவடிக்கைக்கான அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று. மாவீரர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளை பறிகொடுத்த அனைவரும் அந்த துயிலும் இல்லத்தில் ஆண்டில் ஒருதடவை கண்ணீர்விட்டு கதறி அழுது தங்கள் மனவேதனையினை போக்கும் நாளாக காணப்படுகின்றது.
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி!
கடந்த ஆண்டு மக்கள் எல்லா இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களின் பிணைப்பினை காட்டி வெளிப்படுத்தி நின்றார்கள்.
இவ்வாறு இருக்கும் போது படையினர் எங்கெங்கு காணிகளை சுவீகரிக்கமுடியுமோ அங்கங்கு சுவீகரித்து மிகவும் முக்கியமான வரலாற்று இடங்களில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதனை நோக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரை மிக அதிகமாக குவித்துவைத்துக்கொண்டிருக்கும்.
இலங்கை அரசானது தொடர்ந்தும் மக்களின் நெஞ்சங்களில் ஏறி மிதிக்கும் செலயாக நாங்கள் இதனை பார்க்கின்றோம் இது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள காணிகளை விட்டு படையினர் வெளியேறவேண்டும் சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.
இது மக்களின் உதிரத்தோடு இருக்கும் காணிகள் மக்கள் தங்கள் உறவுகளை நினைத்து நெஞ்சம் உருகின்ற தன்மைக்கு அரசாங்கம் விட்டுக்கொடுக்கவேண்டும்.
இது மீறும் பட்சத்தில் இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாமல் இதற்கான விளைவுகளை பொறுப்பெடுக்கவேண்டிய நிலை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.