அல்பேர்ட்டா தீயுடன் போராட தென் ஆபிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்.
கனடா-அல்பேர்ட்டா வோர்ட் மக்முரேயில் இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலையில் இருக்கும் தீயை அணைக்க ஜோஹனெஸ்பேர்க்கிலிருந்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு படை வீரர்களை எயர்கனடா விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை எட்டமன்டனில் தரையிறக்கியுள்ளது.
இதுவரை கண்டறியாத அளவு மிக பாரிய காட்டு நில தீயணைப்பு வீரர்கள் கனடாவிற்கு அணிதிரட்டப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
மக்முரேயில் 58-நூறு சதுர கிலோ மீற்றர்கள் பகுதிகளை சூழ்ந்திருக்கும் தீயானது சஸ்கற்சுவானையும் ஊடுருவி உள்ளதென அல்பேர்ட்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது.