நாட்டில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் பத்து நாட்களில் தெமட்டகொட – அராமய பகுதியில் உள்ள மக்களுக்கு பீ.சீ.ஆர் அல்லது ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
இந்த பகுதியில் அண்மையில் ஐந்து பேர் டெல்டா கொரோனா திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.