ஆவரங்கால் கிழக்கில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அலைபேசியைத் திருடிச் சென்றவர் பொலிஸாரால் சில மணித்தியாலத்திலேயே கைது செய்யப்பட்டார்.
நேற்று பி.ப. 4.30 மணியளவில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து திருடன் உள்நுழைந்துள்ளான். அலைபேசியைத் திருடிக் கொண்டு அவன் தப்பித்துச் செல்லும்போது, மோட்டார் சைக்கிள் இலக்கத்தைப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
பொலிஸாரிடம் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை கொடுத்தனர்.
பொலிஸார் சில மணித்தியாலங்களிலேயே 21 வயதான இளைஞனைக் கைது செய்தனர். அலைபேசி யையும் மீட்டனர்.