அலெப்போவில் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதா? ஆராயும் ஐ.நா
சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நச்சு வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் குறித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிளர்ச்சியாளரகள் வெளியிட்டுள்ள செய்தியில், தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அரச படையினர் குளோரின் வாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், இதன்போது நால்வர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை சிரியாவிற்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர், அலெப்போவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் குளோரின் வாயுத் தாக்கதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது உறுதிப்படுத்தப்படுமானால், சிரியாவில் தொடரும் போர்க் குற்றங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் குளோரின் வாயுத் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் மக்கள், சுவாசப் பிரச்சினை காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.