கடந்த காலங்களில் நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிரிபத்கொடையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் ஹம்பாந்தோட்டையாகும்.
அரசியல் இலாபங்களுக்காக துறைமுகம், விமான நிலையம், நெடுஞ்சாலைகளை அமைத்துச் சென்றது கடந்த அரசாங்கம். அதேபோல் இந்த அரசாங்கமும் அதிக முதலீடுகளை செய்து அபிவிருத்தி செய்தது குறித்த பிரதேசத்துக்கே என்றாலும் அங்கு தான் மந்தபோசனையால் குழந்தைகள் உயிரிழக்கின்றன.
2005ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தின் அதிக முதலீடுகள் இடம்பெறுவது ஹம்பாந்தோட்டையிலேயே’ என குறிப்பிட்டுள்ளார்.