தமிழ் திரையுலகில் வசீகரமான குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பாம்’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பாம்’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிவாத்மிகா ராஜசேகர், நாசர் , அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பி. எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக மோசன் போஸ்டரில் கதையில் இடம் பிடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களின் கதாபாத்திர தோற்றத்துடன் அறிமுகமாகிறார்கள்.
இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் நகைச்சுவை -சென்டிமென்ட் -காதல் – உறவு சிக்கல் ஆகிய கலவையுடன் பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி இருக்கிறது.
இதனிடையே ‘காந்த குரலோன்’ அர்ஜுன் தாஸ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘போர்’ மற்றும் ‘ரசவாதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆனால் வணிக ரீதியான வெற்றியை எதிர்பார்த்த அளவிற்கு பெறாததால் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பாம்’ படத்திற்கு திரையுலக வணிகர்கள் இடையே பெரிய வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.