அரை வருடம் ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய ஒரு குடும்பம் ஏன் தங்கள் வீட்டை விற்றனர்?
கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த குடும்பம் ஒன்று நாள் முழுவதும் வேலை மற்றும் சொந்த வீட்டினால் ஏற்படும் உழைச்சல்களில் இருந்து சற்று விடுபட நினைத்தனர். இதனால் வீட்டை விற்று பொருட்களை சேமிப்பகத்தில் வைத்து விட்டு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
விற்பனைக்கு வீட்டை ஆயத்தம் செய்பவர் ஒருவரை அழைத்து ஆயத்தம் செய்து விற்பனைக்கு விளம்பரம் செய்தனர். ரியல் எஸ்டேட் சந்தை நாட்டின் மிக அபத்தமான நிலையில் சூடேறியுள்ள ரொறொன்ரோவில் இவர்களது வீடு அமைந்துள்ளதால் ஐந்து நாட்களிற்குள் விற்பனையாகிவிட்டது.
வீட்டு சொந்த காரர் மத்திய அரசாங்கத்தில் பணி புரிபவர். அவரது மனைவி ஊவுஏநேறள.உய எழுத்தாளர். 10மற்றும் 8வயதுகளில் இரு பிள்ளைகள். இருவரும் பணிகளிலிருந்து விடுப்பு எடுத்தனர்.பிள்ளைகளின் கல்வியை வீட்டுபள்ளி மூலம் தொடர்வதாக பாடசாலைக்கு தெரியப்படுத்தினர்.
மிக ஆர்வத்துடன் ஐரோப்பா சுற்றுலாவை ஆரம்பித்துள்ளனர்.