அரியாலை உதயபுரத்தில் கடந்த 22ம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்பொண்டுவரும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் நேற்றைய தினம் மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல் நடாத்தினர்.
உதயபுரத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணத்துன்போது பயணித்த வாகனத்தை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி தேடுதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதவானிடம் கோரப்பட்டிருந்த்து. அதனை ஏற்று நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று மாலை திடீரெனப் பயணித்த பொலிஸ் குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா என்பதனை தேடியுள்ளனர்.
இருப்பினும் இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட பொலிசாரிடம் எந்தவொரு தடயமும் கிடைக்காதமையினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். குறித்த பொலிஸ் குழுவினர் தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்