அரியானாவின் மகேந்திராகார்க் பகுதியில் மத்திய பல்கலையில் காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகே உள்ள வழிபாட்டு தலத்தில் தொழுகைக்காக சென்றனர்.
அப்போது 15-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இரண்டு மாணவர்களையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த நிலையில் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
தாக்கியதற்கான காரணம் தெரியவில்லை எனவும் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்த காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரியானா முதல்வர் மனோகர் கட்டாரை வலியுறுத்தியுள்ளார்.