அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்குதல் மற்றும் அதிக விலை அறவிடுவதன்மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.