அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்குப் போட்டியாக தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சங்கம் எனும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த இச்சங்கத்தின் மகா சபைக் கூட்டம் இன்று(19) நண்பகல் கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பல்துறை வைத்திய அதிகாரிகள் சங்கம் எனும் பெயரில் இயங்கிய அமைப்பையே தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் சங்கம் எனும் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நிரோஷன பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த இரு வருடங்களாக வைத்தியர்களின் தொழில் பிரச்சினைகளுக்காக முன்னிற்கவில்லையென்ற குற்றச்சாட்டை நிவர்த்தி செய்வதற்கு இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.