சைட்டம் பிரச்சினை சம்பந்தமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
சைட்டம் நிறுவனம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து இதன்போது விரிவாக பேசப்பட்டுள்ளது.
தமது சங்கத்தினால் சைட்டம் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஐந்தையும் செயற்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது உடன்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய கூறினார்.
குறித்த யோசனைகளை செயற்படுத்துவதற்குறிய நடவடிக்கையை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிரதமரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த யோசனைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புவதாக வைத்தியர் அநுருத்த பாதெனிய கூறினார்.