அரச ஊழியர் ஒருவரின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி முப்பத்தாறு வீதத்தால் (36%) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி சுமார் இருபது வீதத்தால் (20%) குறைந்துள்ளது.
குறித்த தரவுகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
உண்மையான சம்பளம்
இதற்கமைய, 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கிடையில் 50,000 ரூபா சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளம் 32,000 ரூபாவாக குறைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு இலட்சம் ரூபா (100,000) சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளம் 64,000 ரூபா எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இரண்டு இலட்சம் ரூபா சம்பளம் பெற்ற ஒருவரின் உண்மையான சம்பளத்தின் பெறுமதி ஒரு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபா என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரி செலுத்த வேண்டியுள்ளதன் காரணமாக 100,000 ரூபாவுக்கு மேல் சம்பளம் வாங்கும் நபரின் கொள்வனவு சக்தியும் குறைந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் குறிப்பிட்டுள்ளார்.