இந்த வருடம் முதல் அரச சேவையில் உள்ள ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (24.02.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் இது போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
சம்பள அதிகரிப்பு
கொவிட் – 19 தொற்று காலத்தில் தவறான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் போதும் கூட, சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொடுத்ததன் காரணமாக தான் சுகாதாரத்துறை ஓரளவு சரி சீரான நிலையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அரச ஊழியர்கள் மீது பாரிய அளவு வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட நம் நாடு என்ற எண்ணத்துடன் சேவையை வழங்குபவர்களை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர கொடுப்பனவுகள் புதிய சம்பள அதிகரிப்பின் படி, அடிப்படை சம்பளம் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும்.
அத்துடன், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் வைத்திய அதிகாரிகள் சம்பளம் அதிகமாக இருக்கும். மேலும், ஆரம்ப நிலை வைத்திய அதிகாரியின் அடிப்படை சம்பளம் 26,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.