அரசுக்கு எதிரான சாலாவ சூழ்ச்சியின் பின்னணியில் மஹிந்தவின் இராணுவம்!
தீ விபத்து என்ற ரீதியில் பார்க்கும் போது விபத்திற்கான பல காரணங்கள் கூறப்படும். ஆனால் இன்று வரை குறித்த வெடிப்பு தொடர்பில் சரியான நம்பத்தகுந்த காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
தற்போது சாலாவ விபத்துக்கு காரணம் மஹிந்த தரப்பினர் என்றும், அரசியல் ரீதியில் பலிவாங்குவதற்காகவே அது நிறைவேற்றப்பட்டதாகவும் அதற்கு உடந்தையாக இராணுவமே செயற்பட்டதாகவும் நோக்குனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் இராணுவத் தலைமையகத்தின் உத்தரவையடுத்து, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அணியில் இருந்த இராணுவத்தினர் விலக்கப்பட்டனர்.
இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் அப்போது பலத்த எதிர்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படாமல் மஹிந்தவின் பாதுகாப்பு நிமித்தம் நியமிக்கப்பட்டிருந்த அனைவரும் நீக்கப்பட்டனர்.
இங்கு செல்வாக்கு மிக்க வாழ்வு வாழ்ந்து வந்த மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தகர்கள் பணிநீக்கம் என்பது அவர்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்போடு மக்கள் மத்தியில் மிடுக்கோடு வலம் வந்த மஹிந்திவின் செல்வாக்கிற்கும் ஏற்பட்ட இழுக்கு என்பது வெளிப்படையான விடயமே.
அதே சமயம் வெடிப்பு ஏற்றட்ட ஜூன் மாதத்திற்கு முற்பட்ட காலங்களில் மஹிந்த மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகள் நல்லாட்சி மூலமாக திணிக்கப்பட்டது. மஹிந்த உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நல்லாட்சியே காரணம் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. ஆனாலும் அரசு அவற்றினை பொருட்படுத்தவில்லை.
இவை அனைத்தின் காரணமாக மஹிந்த சார்பு இராணுவம் திட்டமிட்டு செய்யப்பட்ட பலிவாங்கும் செயலே சாலாவ வெடிப்பு என்று கூறப்படுகின்றது.
இதேவேளை தற்போது வரையில் சாலாவ விபத்தின் உண்மையான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை மஹிந்தவை தண்டிக்க துடிக்கும் நல்லாட்சி இதனை வெளிப்படுத்தினால் இலாபம் நல்லாட்சிக்கே என்ற வகையிலும் சிந்திக்கத் தோன்றும்.
ஏற்கனவே சர்வதேசத்தின் பார்வையில் சிக்குண்ட தற்போதைய ஆட்சிக்கு போர்க்குற்றம் தொடர்பில் தப்பவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கான ஒரு செயலாக இது அமைந்து விட்டது.
சாலாவ ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவத்தினால், சுமார் 70ஆயிரம் இராணுவ படையினரின் ஆவணங்கள் அழிந்து போயுள்ளன. குறித்த ஆவணங்களை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றும் இராணுவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் சாலாவையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் இடமாற்றம் பெற்றதற்கு பிறகு அங்கு இராணுவ ஆவணங்களே அதிகமாக காணப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆவணங்கள் அழிக்கப்படும் போது போர்க் குற்றங்களில் இருந்து தப்ப அரசிற்கு ஏதுவாக அமைந்து விடும் அதனால் அரசிற்கு அது இலாபமே.
தற்போதைய நிலவரப்படி சாலாவ குற்றச்சாட்டு மஹிந்த மீது திணிக்கப்பட அவசியம் இல்லை ஏற்கனவே பல விசாரணைக் குற்றச்சாட்டுகளை அரசு தன் வசம் வைத்துள்ளது.
எனவே தக்க சமயத்தில் மஹிந்தவை வீழ்த்த சாலாவ குற்றச்சாட்டு அவசியம். இருந்தாலும் இது வரையில் அந்த விபத்தினால் அரசிற்கு இலாபமே.
இவ்வாறான காரணத்தினால் ஒரு கல்லில் இரு மாங்காய் செயற்பாட்டுக்காகவே அரசு பொறுமை காத்துள்ளதாகவும் தகுந்த சமயத்தில் வெளிப்படுத்தப்படும் எனவும் நோக்குனர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.