ஒவ்வொரு அரசியல் வாதியும் கூறும் விதத்தில் தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது எனவும் தேர்தலை நடாத்துவதற்கு என்று கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அரசாங்கம் விரைவாக உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை வைத்தே தேர்தலுக்குரிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று (26) தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.