அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் அமைச்சர் மங்கள..!
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ள அவர் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிக்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலில் தற்போது சில அவப்பெயர்களை சந்தித்து வரும் அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவியை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டு அரசியலை விட சர்வதேச அரசியலிலே தனக்கு சுதந்திரமாக செயற்பட முடியும் என அமைச்சர் தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய 2020ஆம் ஆண்டளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உள்நாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நம்பப்படுகின்றது.