பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது என்று எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று கிராமம் கிராமமாக, வீடு வீடாக இல்லை என்ற வார்த்தையே மற்றும் பொருளாதார நெருக்கடியின் வேதனையிலும் மக்கள் உள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எந்தவிதக் கவனத்தையும் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
கெஸ்பேவ நகரத்தில் நடைபெற்ற “விருப்பப்படி ஆட்சியாளர்கள் – பட்டினியில் மக்கள்” என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் நண்பர்கள் கும்பல் மற்றும் பாரிய அளவிலான மாபியாக்கள் செயற்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கிக் கொண்டே செல்லுகின்றது எனவும் தெரிவித்தார்.
சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், அரசியல் உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததுடன் மாறாக, இன்று நடப்பது மக்களுக்கு அசௌகரியத்தையும் வறுமையால் வாட்டுவதையுமே அரசாங்கம் செய்கின்றது எனத் தெரிவித்தார்.
கெஸ்பேவ ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் கயான் த மெல் அவர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]