கடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரத்தையும் அரசாங்கத்தையும் சிரமங்களுடன் முன்னெடுத்துச் சென்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி போர் முடிந்த பின்னர், நாட்டை முன்னேற்றி, வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார்.
எனினும் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இருந்த பிரச்சினைகள் மேலும் உக்கிரமடைந்தன. பெருமளவில் கடனை பெற்றனர். கடனை திரும்ப செலுத்த நாட்டின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை.
கடும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது, எங்களால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என மகிந்த ராஜபக்ச எண்ணினார்.
ஒரு வருடத்தில் பொருளாதார வீழ்ச்சியடைந்து, அரசாங்கம் கவிழும், அவர் ஆட்சியை பிடிக்கலாம் என கருத்தினார். தற்போது நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.