நடைபெறவுள்ள மாகாண சபைகள் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றில் கூட்டு எதிர்க் கட்சி உட்பட சகல அரசியல் சக்திகளையும் இணைத்துக் கொண்டு மலர் மொட்டு சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல்களுக்கு முகம்கொடுப்பதற்குத் தேவையான சகல சக்தியையும் திரட்டும் வேலைத்திட்டங்கள் குறித்து தற்பொழுது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கத்தை சுருட்டிக் கொண்டு வீட்டுக்கு அனுப்புவோம்” எனும் கருப்பொருளில் இந்த வேலைத்திட்டம் அமையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.