தாம் கடந்த 10 வருடங்கள் நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளதாகவும், 18 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஜனாதிபதி கூறியது போல் இருக்கவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லாட்சியொன்றை மேற்கொள்ள அரசியலமைப்பின் 18 ஆம் 19 ஆம் திருத்தங்கள்தான் தடையாக அமைந்துள்ளதாகவும், அவற்றை மாற்றுவதே ஒரேதற்போதைய தேவையாகவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த கருத்துக் குறித்துக் விளக்கமளிக்கையிலேயே இதனைக் கூறினார்.
எமது ஆட்சியில் 18 ஆம் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவரும் இணைந்து தான் வாக்களித்தார். இந்த அரசாங்கத்தில் 19 இற்கும் அவ்வாறுதான். அப்போது ஜனாதிபதி இந்த திருத்தத்துக்கு தனது நற்சான்றிதழ் ஒன்றையும் வழங்கியிருந்தார். கடந்த நான்கரை வருடங்கள் கழிந்த பின்னர் இது அவருக்கு தெரியவந்துள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
18, 19 என்ற போர்வையில் முழு அரசியலமைப்பையும் மாற்றுவதற்கே அரசாங்கம் எத்தனிப்பதாகவும், மறைமுகமாக அவர்களுக்குள் பாரிய வேலைத் திட்டமொன்று செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.