குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகாசங்கத்தினர்கள உள்ளார்கள்.
குடும்ப ஆட்சி தலைத்தோங்குவதற்கு இனியொருபோதும் இடமளிக்க முடியாது.
மக்களாணைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது.அரசாங்கத்திற்கு எதிரான பலமிக்க மாற்று சக்தியை வெகுவிரைவில் உருவாக்குவோம் என முன்னாள் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் ராஜகிரியவில் உள்ள அமரபுர பீடத்தின் பதில் மாநாயக்க தொடம்பனே சந்ரபான தேரரை சந்தித்து ‘முழு நாடும் சரியான பாதைக்கு ‘கொள்கை திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வரமுன்னின்று செயற்பட்டோம்.
அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக தற்போது செயற்படுவதால் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றினைந்துள்ளோம்.மக்களாணையினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பங்காளி கட்சிகளுக்கு உண்டு.
குழும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகாசங்கத்தினரும் உள்ளார்கள்.
குடும்ப ஆட்சி மீண்டும் தலைத்தோங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது.தவறை திருத்திக்கொள்ளும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.
அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
புலம் பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கு ஒருபோதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் நாட்டுக்கு எதிரான கொள்கையினை உடையவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள கூடாது என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]