சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு காணாவிடின் அது அரசியல் இருப்பிற்கு தீர்மானமிக்கதாக அமையும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி துறை அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை இடைநிறுத்தியுள்ளதால் நாடு தழுவிய ரீதியில் மின்விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டதன் பின்னரே மின்னுற்பத்தி துறையில் மின்சார சபை முன்னெடுக்காத பல விடயங்களை வலுசக்தி அமைச்சு பகிரங்கப்படுத்தியது.
தேசிய மின்விநியோக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனையை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமும், மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேவிடமும் வலுசக்தி அமைச்சர் என்ற ரீதியில் குறிப்பிட்டுள்ளேன்.
மின்விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நீண்டகால கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
நெருக்கடியான நிலையின் போது மாத்திரம் தீர்வு காணும் திட்டங்களை செயற்படுத்துவதை மின்சாரசபை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கமைய அரசாங்கம் செயற்படுகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கல், யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம், 20ஆவது திருத்தத்தின் ஒரு விடயங்கள் சுபீட்சமான கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பிடப்படவில்லை.
அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படும் போது அதனை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு கூட்டணியில் உள்ள பங்காளிக்கட்சிகளுக்கு உண்டு.சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு காணாவிடின் அது அரசியல் இருப்பிற்கு; தீர்மானமிக்கமாக அமையும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]