எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் நாட் டில் இடம்பெறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்காது அமைதியாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அரசாங் கம் மேற்கொள்ளும் முறையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கூட்டு எதிரட்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிடிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் நாட்டுக்குப் பாதகம் ஏற்படுத்தும் பல்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறது. எனினும் அவற்றை முறையற்ற வகையிலேயே நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தணிப்பதையே அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் நாட்டில் முப்பது வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தையும் அரசியல் தலைவர்களையும் விசாரணைக்குட்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்ம் வழிகோலுகிறது. இவ்வாறான நடவடிக்கையினை வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாதுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இங்கிலாந்தின் பிரதமர் தமது நாட்டு இராணுவத்தினர் தவறுசெய்கின்ற போதிலும் அது தொடர்பில் வேறு தரப்பினர் விசாரணை நடத்ததுவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை காணாமலாக்கப்படுதலிலிருந்து ஆட்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்காது காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. அச்சட்டமூலம் நாட்டின் பாதுகாப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் பாதகமாக அமையவுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணசபைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவுள்ளது.
எனினும் அத்தேர்தலையும் நடத்தாது காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முற்படலாம். அவ்வாறு செய்யுமாக இருந்தால் அதற்கெதிராக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.
ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் இரா.சம்பந்தன் அமைதியாக இருக்காது அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.