‘அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அயோத்தியில் ராமர் கோவிலும், லக்னோவில் மசூதியும் கட்டலாம்’ என, உ.பி., ஷியா வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
உ.பி., ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாவது: அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சமரசம் செய்ய முன் வந்துள்ளோம்.
அதன்படி, அயோத்தியில் உள்ள நிலத்தை ஹிந்துக்களுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ராமர் கோவில் கட்டலாம். அதே நேரத்தில், லக்னோவின் ஹுசைனாபாத் பகுதியில், மசூதி அமைக்க வேண்டும். இதற்கு மாநில அரசு, ஒரு ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும்.
இந்த சமரசம் தொடர்பான வரைவு அறிக்கையை, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.