அம்மாவுக்கு ஏன் கோவில் கட்டினேன் – மனதை உருக்கும் லாரன்ஸ் விளக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை நடத்திவருவதுடன் பல ஏழைக்குழந்தைகளுக்கு அறுவை சிகி்ச்சைக்கு உதவி வருகிறார். சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு ரூ. 1 கோடி வரை உதவி செய்து கதாநாயகனாக ஜொலித்தார்.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன்னுடைய தாயை பற்றி நினைவு கூர்ந்தார். எனக்கு சிறுவயதில் கைகால்கள் சரியாக இல்லை. வறுமையில் இருந்த போதும் என்னை தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மருத்துவம் பார்த்தார். பேருந்து கட்டணத்தை கூட குறைத்துக்கொண்டு எனக்கு பிடிக்கும் என்பதற்காக ரோஸ்மில்க் வாங்கித்தருவார்.
இதுபோன்று பல விஷயங்களில் தியாகம் செய்து என்னை வளர்த்தார். அந்த நன்றிக்காகத்தான் அவருக்கு கோவில் கட்டினேன். அவருக்கு விருப்பம் இல்லாதபோதும் மற்றவர்கள் இதைப்பற்றி பேசுவது என் தாயாருக்கு மகிழ்ச்சியை தரவேண்டும் என்று நினைத்தேன் என்றார்.
மேலும், இதை பார்த்தாவது பணத்தை செலுத்தி முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடும் பிள்ளைகள் திருந்தவேண்டும் என்று விரும்பினேன்.