நோயாளர்காவு வண்டி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் உள்ள செம்மலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. விபத்தை அடுத்து நோயாளர்காவு வண்டி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.
செம்மலை மருத்துவமனைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டி, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். விபத்து நடந்த சமயம் நோயாளர் காவு வண்டியில் நோயாளர் எவரும் இல்லை, மருத்துவமனைப் பணியாளர்களையே ஏற்றிச் சென்றது என்று கூறப்படுகின்றது.
விபத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நோயாளர்காவு வண்டியை அடித்து நொறுக்கியுள்ளனர். நோயாளர்காவு வண்டியின் சாரதி மக்களிடம் இருந்து தப்பித்து முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் சரணடைந்தார். பொலி ஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டனர். உயிரிழந்தவரின் உடல் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.