அம்பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
அம்பலாங்கொடை, படபொலவில் மர்ம நபர்கள் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் ஆராய்ந்து வரும் அதேவேளை, காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.