அமெரிக்க விமானத்தை சீன போர் விமானம் இடைமறித்ததையடுத்து நாடு வானில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் அமெரிக்க EP-3 விமானம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், கிழக்கு சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை சீன போர் விமானம் இடைமறித்துள்ளது.
அமெரிக்காவின் EP-3 விமானத்திற்கு மிக நெருக்கமாக சீனாவின் J-10 fighter விமானம் வந்ததாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க விமானம் தனது பாதையை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு சீன கடல் எல்லைக்குள் பறந்த அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை சீன போர் விமானங்கள் இடைமறித்ததால் நடுவானில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.