கோர்ட் உத்தரவிட்டதையடுத்து ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க அமெரிக்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி காலத்தில் திருநங்ககைளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கிட சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் முப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டன.
இதனை தற்போதைய டொனால்ட் டிரம்ப் அரசு முற்றிலுமாக நீக்கியது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்தவழக்கில் திருநங்கைகளுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதையடுத்து ராணுவத்தில் திருநங்கைகள் பணியில் சேர்க்க அனுமதியளித்தது. வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இவர்கள் பணியில் சேர்க்கப்படுவர் என ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.