இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உள்விவகாரங்கள் தொடர்பில் பாரிய தலையீடுகளை செய்துவந்த அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஐ எதிர்வரும் ஜூலை மாதம் மாற்றம் செய்வதற்கு டிரம்பின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டிரம்பின் நெருங்கிய ஒருவர் இந்நாட்டுக்கு அமெரிக்காவின் தூதுவராக நியமனம் செய்யப்படவுள்ளார்.
அதுல் கேஷாப் தலைமையிலான குழு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவாளர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இந்நாட்டைவிட்டும் செல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
டிரம்பின் நெருக்கமான குழுவினர் இந்நாட்டின் தூதரகத்துக்கு வருகை தந்துள்ளமையானது, அரசாங்கத்துக்கான நெருக்கடிகள் குறைய காரணமாக அமையும் என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.