அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்ற கனேடியர்கள்

அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்ற கனேடியர்கள்

வருடம் தோறும் அமெரிக்க ஜனாதிபதியால் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் ‘பிரசிடன் மெடில் ஒஃப் பிரீடம்’ விருதினை (Presidential Medal of Freedom) கனேடிய சாதனையாளர்களும் இருவர் பெற்றுள்ளனர்.

Frank Gehry மற்றும் Lorne Michaels  ஆகியோர் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கையினால் பதங்கங்களை பெற்றுக்கொண்டனர்.

இவர்களில் Frank Gehry சிறந்த கட்டடக் கலைஞர் என்பதுடன், லோஸ் ஏஞ்சல்ஸில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேள்ட் டிஸ்னி மண்டபத்தின் வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றைய கனேடியர் Lorne Michaels ள 13 தடவைகள் எமி விருதுகளை பெற்றவர் என்பதுடன், அதி சிறந்த நகைச்சுவை நாடகங்களை எழுதுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவர்களது புத்துருவாக்கங்கள் மற்றும் சேவைகளை பாராட்டிய ஒபாமா அவர்களுக்கான பதக்கங்களினையும் அணிவித்தார்.

குறித்த ஜனாதிபதி விருதானது அமெரிக்கா மற்றும் உலக அளவில் சாதித்தவர்களை 21 துறைகளின் கீழ் அடையாளம் கண்டு கௌரவிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News