அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் பிலேயின் நகரில் நடைபெற்ற 33வது அமெரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டியிலேயே 14 வயது ஆண்கள் பிரிவின் வெங்கலப்பிரிவின் வெற்றிக்கிண்ணத்தையே கனடாவில் இருந்து சென்ற செம்பகம் இளையோர் அணி தனதாக்கி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மேலும் அறியவருவதாவதுஇ அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் பிலேயின் நகரில் 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமெரிக்க கோப்பை கால்பந்தாட்ட n;வற்றிக்கிண்ண போட்டிகள். 33வது தொடர்வருடமாக நடைபெறும் இப்போட்டிகள் மேற்குலகில் நடைபெறும் பெரும் கால்பந்தாட்ட போட்டியாகும். இப்போட்டிகள் அங்கமைந்துள்ள தேசிய விளையாட்டரங்க திடல்களிலேயே நடைபெறுகின்றன. இவ்விளையாட்டுத்திடலில் 54 கால்பந்து விளையாட்டுத்திடல்கள் அமைந்துள்ளமை குறி;ப்பிடத்தக்கது.
9 வயது முதல் 19 வயது வரை ஆண்கள் பெண்கள் பிரிவுகளாகவும் சில வயதெல்லைகளில் இரண்டு பிரிவுகள் என 38 வெற்றிகிண்ண போட்டிகள் நடைபெறுகின்றன. இவ்வருட போட்டிகளில் அமெரிக்காவின் 17 மாநிலங்களில் இருந்தும் 15 நாடுகளில் இருந்தும் 1168 அணிகள் கலந்து கொண்டன. இதில் மொத்தம் 16 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 33 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டும் போட்டியாக கருதப்படும் இப்போட்டியில் முதற்தடவையாக 14 வயது ஆண்கள் பிரிவில் கனடிய தமிழர் விளையாட்டுத்துறையின் செம்பகம் அணியும் கலந்து கொண்டது.
தமிழரின் தேசிய இலட்சனையான செம்பகத்தின் பெயரைத் தாங்கி களமிறங்கிய கனடிய தமிழர் இளையோர் அணி முதல் போட்டியிலேயே 12 கோல்களைப்போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ந்தது. முதல் போட்டி மினிசோட்டா யூனைட்டெட் கழக அணிகெதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. தனது இரண்டாவது போட்டியில் 15 கோல்களைப் போட்டு தாம் அசாத்திய திறமைசாலிகள் தான் என்பதையும் நிரூபித்தனர். முதல் நான்கு முன்னோடிப்போட்டிகளில் 37 கோல்கள் போட்டு தனது பிரிவில் முதற்தர அணி என்பதற்கான முன்னறிவித்தலையும் விடுத்தனர். இப்போட்டிகளில் இவர்களுக்கு எதிராக எவ்வித கோல்களும் விழாது வேறு பார்த்துக் கொண்டனர்.
5 அணிகளைக் கொண்ட 5 அணிப்பிரிவுகளில் தமது பிரிவில் 4 போட்டிகளையும் வென்று 12 புள்ளிகளுடன் முன்னேறிய ஈழத்தமிழர் அணி கால் இறுதி அரையிறுதி போட்டிகளிலும் இலகுவான வெற்றிகளை தமதாக்கி முன்னேறிய செம்பக அணிக்கு இறுதிப்போட்டியில் இன்னொரு பலம் பொருந்திய ஆம் யாருமல்ல பிறிசேலிய அணி காத்திருந்தது. விறுவிறுப்பாகவும் கடும் மோதலாகவும் அமைந்த போட்டியின் முடிவில் 2-1 என்ற கோல் அடிப்படையில் கனடிய தமிழர் செம்பகம் இளையோர் அணி மிகவும் பலம் பொருந்திய பிறிசேல் அணியையும் வீழ்த்தி கனடாவிற்கு மட்டுமன்றி ஈழத்தமிழினத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர். 25 அணிகள் கலந்து கொண்ட 14 வயது ஆண்கள் பிரிவின் அமெரிக்க வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளனர்.
தாயகத்தில் இனஒடுக்குமுறைக்கு உள்ளான இனம் என்றவகையில் பல வாய்ப்புகளை இழந்த ஈழத்தமிழினம் புலம்பெயர் வாழ்வில் தன் திறமைகளை வெளிக்காட்டி தம்மை சர்வதேச அரங்கில் அடையாளத்துடன் நிலைநிறுத்த மாட்டார்களா என ஏக்கத்துடன் காத்திருந்தவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சி தரும் செய்தியே. இதற்கான பயிற்சிகளை வழங்கி இப்போட்டியில் மட்டுமன்றி கனடாவில் நடைபெற்ற வேறும் போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொண்டு வெற்றியாளர்களாதற்கு வழிகோலிய கனடிய தமிழர் விளையாட்டுத்துறையினரும் பாராட்டுதற்குரியவர்கள்.
இவ்விளையவர்கள் தொடர்ந்தும் தமது திறமைகளை வளர்த்து எதிர்காலத்தில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக வரவேண்டும் என்றும் கனடிய தேசிய அணியில் விளையாடும் காலம் விரைவில் அமையும் எனவும் வாழ்த்துவோம். அவர்கள் விளையாடிய போட்டிகளின் விபரம் வருமாறு
CTSA SENBAKHAN, Canada 12-0 MINNEAPOLIS UNITED JOHNSON , Minnesota
CTSA SENBAKHAN, Canada 15-0 WBSC RICKS, Minnesota
CTSA SENBAKHAN, Canada 9-0 LAKES UNITED FC TARLIZZO , Minnesota
CTSA SENBAKHAN, Canada 1-0 NLS, USA
Quter Finals
CTSA SENBAKHAN, Canada 8-0 TONY GLAVIN LIONS WHITE, Missouri
Semi Finals
CTSA SENBAKHAN, Canada 8-0 JOTP, Minnesota
Final
CTSA SENBAKHAN, Canada 2-1 ESPORTE CLUBE PINHERIOS, Brazil