இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள இராணுவ தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இராணுவத் தளபதி, கடந்த ஐந்து வருட காலமாக ஐக்கிய அமெரிக்காவுடனான அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இதன்போது, இராணுவ பதவிநிலை அதிகாரிகள், ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசகர் யூனா பெனான்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது