அமெரிக்க அரசு விருந்தில் இரு ஆசியச் சிறுமிகள்: வெள்ளை மாளிகை கவுரவிப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடக்கும் சிறுவர்களுக்கான விருந்து நிகழ்ச்சியில் இந்திய சிறுமிகள் 2 பேர் கலந்துகொண்டனர். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காணும் இயக்கத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் நடத்தி வருகிறார்.
இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், உடல் பருமனை குறைக்கும் சத்தான உணவு தயாரிக்கும்போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டில் பங்கேற்கும் சிறுவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்து கவுரவிக்கப்படும்.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட சத்தான உணவு தயாரிக்கும்போட்டியில் அமெரிக்கா முழுவதும் இருந்து சுமார் 6 ஆயிரம் உணவு வகைகளை மதிப்பீடு செய்யப்பட்டது. இறுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சிறுமிகள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் வெள்ளை மாளிகையில் நடந்த இரவு உணவு விருந்தளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற இன்டியானாவை சேர்ந்த சக்தி ராமச்சந்திரன்(8) என்ற சிறுமி சிக்கன் டிக்கா பிடா மற்றும் வெள்ளரிக்காய் ரய்தா செய்திருந்தார்.
இதேபோல் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மற்றொரு சிறுமியான பிரியா படேல் (10) டெக்ஸ் மெக்ஸ் என்ற உணவு வகையை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.