அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ்
டொனால்டு டிரம்புடன் மைக் பென்ஸ்.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக கோடீசுவர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
எனவே, அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி விட்டார். இதற்கிடையே குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் தேர்வும் நடைபெற்றது.
இந்த நிலையில் மைக் பென்ஸ் (57) துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது இண்டியானா மாகாணா கவர்னராக பணிபுரிகிறார்.
கடந்த 12 ஆண்டுகளாக குடியரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.