அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஆப்கன் பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வடக்கு பாகிஸ்தானில் குர்ராம் ஏஜென்ஸி பகுதியில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தான் தலிபானுடன் தொடர்பு கொண்ட ஹக்கானி பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் காவாரி மற்றும் பயங்கரவாதிகள் அசான் கோராய் மற்றும் நஷிர் முகமது கொல்லப்பட்டனர் . பயங்கரவாத விவகாரத்தில் டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதலே ஆங்காங்கே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதலை தொடங்கிவிட்டது.
அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்து உள்ளது.
எல்லையில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு அகதிகளாக வந்தவர்
களை காரணம் காட்டிஉள்ளது.
அமெரிக்க ராணுவம் முன்தகவல் எதுவும் இன்றி பாகிஸ்தான் பகுதியில் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதற்கு “அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச செயல்கள். பயங்கரவாதத்திற்கு
எதிரான போரில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கூட்டுறவிற்கு தீங்கு விளைவிக்கும்,” என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.