அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கில் விமான சேவைகள் பாதிப்பு..! அச்சத்தில் மக்கள்
அமெரிக்காவை மிரட்டும் ஸ்டெல்லா பனிப்புயயல் காரணமாக 7,600 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தற்போது அமெரிக்காவில் மணிக்கு ஐம்பது முதல் அறுபது கிலோமீற்றர் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதன் காரணமாக கிழக்குப் பகுதியில் பனிப்புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை தற்போது நீடிப்பதால் 31 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி தற்போது காலவரையறை இன்றி ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்லாயிரக்கணக்கான விமானச் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் இந்த பனிப்புயல் வீசுவதன் காரணமாக மக்களை வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.