இந்தியாவின் வளர்ச்சியை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் காட்ட சீனா முயற்சி வருகிறது. அதற்காக அமெரிக்க படைகளுடன் கூட்டுப்பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது சீனா.
பசிபிக் கடலில் ஆண்டு தோறும் அனைத்து நாடுகளும்பங்கேற்கும் கூட்டுப்பயிற்சி நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேசகூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
ஆ.ஐ.எம்.பி.ஏ.சி. என்றழைக்கப்படும் இந்த வருடாந்திர சர்வதேச கூட்டு கடற்படைப்பயிற்சியில் பங்கேற்க தங்களுக்கு ஏற்கனவே அழைப்பு வந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா உரிமை கொண்டாடி வரும் தென் சீனக்கடல்பகுதியில் அமெரிக்கா அத்துமீறி வருவதாக அந்த நாடு குற்றம்சாட்டி வந்தாலும் ஆஐஎம்பிஏசி. பயிற்சியில் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுடன் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.