அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் உளவு பலூன் ஒன்றை தான் பின்தொடர்வதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கையின் பேரில், இந்த பலூனை சுட்டுவீழ்த்துவது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.
ஆனால், இவ்வாறு செய்தால் தரையிலுள்ள பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கருதுகின்றனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல படைத்தளங்கள் மற்றும் அணுவாயுத ஏவுகணைகள் உள்ள அமெரிக்காவின் வடமேற்குப் பிராந்தியத்தில் இந்த பலூன் பறந்துள்ளது.