அமெரிக்கா தந்த நெருக்கடியால் ஹபீஸ் சையத்தின் அமைப்பு உள்பட 72 பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யப்பட்ட கருப்பு பட்டியலில் வைக்க பாக். அரசு உத்தரவிட்டுள்ளது.
‘பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம்கோடி ரூபாய் நிதிஉதவியை அளித்துள்ளன.ஆனால், நடவடிக்கை எடுக்காமல் பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது’ என, அமெரிக்க அதிபர், டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார் மேலும் ரூ 7,290 கோடி ராணுவ நிதி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்நிலையில் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாமேத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் உள்ளிட்ட 72 அமைப்புகளுக்கு பாக். அரசு கிடுக்கிபிடி போட்டுள்ளது.
இது தொடர்பாக பாக். உள்துறை அமைச்சகம் வெளியிட்டு்ள்ள செய்தியில், பாக்.கில் செயல்பட்டு வரும் ஹபீஸ் சையத்தின் ஜாமேத் உத் தாவா என்ற அமைப்பு மற்றும் பாலாஹ்- இ- இன்சானியா- பவுண்டேசன் உள்ளிட்ட 72 அமைப்புகளும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கு எந்த வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிதி . நன்கொடை ஆகிய உதவிகள் அளிக்க கூடாது. மீறுவர்கள் மீது குற்றவழக்குகள் பதியவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாக். அரசின் இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவின் அதிரடி மிரட்டலுக்கு பாக். பணிந்துவிட்டது எனகூறப்படுகிறது.
நஷ்ட ஈடுகோரி நோட்டீஸ்
இதற்கிடையே ஹபீஸ்சையத், 100 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு பாக். அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.