அமெரிக்காவின் விஸ்கான்சினில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மேற்கு-மத்திய விஸ்கான்சினில் தொடரும் பனி படர்ந்த நிலமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக ஏறக்குறைய 40 கிலோ மீற்றர் நீளமுள்ள ஒசியோ மற்றும் பிளாக் ரிவர்ஸ் ஃபால் இடையேயான நெடுஞ்சாலையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தினால் எந்த உயிரிழப்புகளும் இடம்பெறவில்லை என்று நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேநேரம் சுமார் 20 பேர் வரை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனினும் அவர்களில் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இதேவேளை தொடரும் பனியுடான காலநிலை காரணமாக மாநிலத்தில் உள்ள மக்கள் போக்குவரத்தில் ஈடுபடும்போது மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு விஸ்கான்சின் ஆளுநர் டோனி எவர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]